மாநிலம் முழுவதும் மேலும் 247 மலிவுவிலை ‘இந்திரா கேன்டீன்’: குமாரசாமி அறிவிப்பு


பெங்களூரு:

ர்நாடகாவில் இன்று 2018-19ம் ஆண்டுக்கான மாநில வரவுசெலவு திட்டம் முதல்வர் குமாரசாமியால் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள குமாரசாமி, ஏழை நடுத்த மக்கள் பயன் பெறும் வகையில் மாநிலம் முழுவதும் மேலும்  247 மலிவுவிலை இந்திரா உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

பட்ஜெட் உரையை வாசிக்கும் முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநில 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று மாநில முதல்வர் குமாரசாமியால் கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விவசாய கடன் தள்ளுபடி, மதுபானங்களுக்கு கூடுதல் வரி உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது.

அதனுடன்,  ஏற்கனவே கடந்த காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட இந்திரா கேன்டீன் (மலிவு விலை உணவகம்) திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவு படுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திரா கேன்டீன் சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து,  மாநிலத்தின் அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 247 இந்திரா கான்டீன்கள்   திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக  211 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் முதல்வர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.

குமாரசாமியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் திறந்துவைக்கப்பட்ட இந்திரா கேன்டீன்

மிழகத்தில் ஏழை மக்கள் பசியாறும் வகையில் அம்மா உணவகத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு,  பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 101 இடங்களில்  இந்திரா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம்  கடந்த ஆண்டு ஆகஸ்டு 16ந்தேதி காங்கிரஸ் தலைமையிலான அரசால் திறக்கப்பட்டது.

பெங்களூரில்  இந்த உணவகத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி