டில்லி

னியாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் நீட் எழுதுவதை தடை செய்யக் கூடாது என சி பி எஸ் ஈ க்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆகி உள்ளது.   கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி அன்று நீட் தேர்வு குறித்த அறிவிப்பை சி பி எஸ் ஈ வெளியிட்டது.   அதில் தனித் தேர்வர்களாக 12 ஆம் வகுப்பு தேறியோர், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களை இரண்டு வருடங்களுக்கு மேல் படித்தவர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு எழுத விண்ணப்பிக்க தகுதி இல்லாதோர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து 13 மாணவர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.   அவர்கள் தங்கள் வழக்கு மனுவில், “நாங்கள் தனித் தேர்வர்களாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளோம்,   நாங்களும் மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிறோம்.   ஆனால் எங்களுக்கு நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்க தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  எங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.  இதற்கான பதிலை அளிக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு சி பி எஸ் ஈ மற்றும் மருத்துவக் கவுன்சிலை கேட்டுக் கொண்டது.    அதையொட்டி அந்த துறைகள் அளித்த பதிலை நீதிமன்ற அமர்வு பரிசீலித்தது.     இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற அமர்வு “சி பி எஸ் ஈ யின் இந்த உத்தரவு தவறானது.   தனித் தேர்வர்களாக இருப்பினும் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும்,  அறிவிக்கப் பட்ட வயது வரம்புக்குள் இருந்தாலும் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது.   அவர்களையும் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்”  என சி பி எஸ் ஈ க்கு உத்தரவிட்டுள்ளது.