இந்தியாவில் கோலாலகமாக தொடங்கியது உலகக்கோப்பை ஹாக்கி தொடர்!

ஆண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா ஒடிசா மாநிலத்தில் கோலாகலமாக தொடங்கையது. நாளை முதல் அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றன.

hocky

14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கோலாகலமாக நடைபெற்றது. நாளை தொடங்கும் போட்டி அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி சி பிடிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிகா உள்ளிட்ட அணிகளுடன் இணைந்துள்ளது.

hocky

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் முதல் 2 அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரிடையாக தகுதி பெறும், பிற அணிகள் குறுக்கு போட்டிகளில் பங்கேற்று கடைசி எட்டு அணிகளின் இடத்தை பிடிக்கும். இதுவரை நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் 13 முறை பங்கேற்ற இந்திய அணி 1975ல் சாம்பியன் பட்டம் வெற்றது. அதிலிருந்து இன்றுவரை அரையிறுதிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை.

hocky

தற்போது நடைபெறும் இந்த உலக கோபை தொடர் இந்திய மண்ணில் நடைபெறுவதால், இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுக்கிறது. உலக கோப்பை தொடரின் தொடக்க விழா இன்று ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள காலிக்கா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க ஷாருக்கான் மற்றும் மாதுரி தீஷித் நடனமாடியுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-