தமிழக சட்டமன்றத்தில் 12ம் தேதி ஜெ., படத் திறப்பு விழா

சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் 12ம் தேதி ஜெயலலிதா படத் திறப்பு விழா நடக்கிறது.

உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார்.

இதைதொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் அவரது படம் திறந்து வைக்கப்படும் என அதிமுக சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது என்று சட்டமன்ற செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவுக்கு முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து படத்தை திறந்து வைக்கிறார். சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர்.