இந்திரா காந்தி நினைவுநாளை மறக்கடிக்கவே பட்டேல் சிலை திறப்பு: பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

சென்னை:

ந்திராகாந்தியின் நினைவு நாளை மறக்கடிக்கவே மோடி, அன்றைய தினம் பட்டேல் சிலையை திறந்து வைத்துள்ளார் என்றும்,  சிலை வைத்து பெருமைப்படக்கூடிய அளவில் பாஜவில் ஒரு தலைவர் கூட இல்லையா என்றும் மோடிக்கு காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் கடந்த 31ந்தேதி நடைபெற்றது. அதைமுன்னிட்டு தமிழக்ததில்  நடைபெற்ற  புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மோடி மீது கடுமையாக சாடினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் குறித்து திமுக தான் முடிவு செய்யும் என்றவர், தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது என்பதை தெளிவு படுத்தினார்.

தொடர்ந்து பேசிய பீட்டர் அல்போன்ஸ், பட்டேல் சிலை திறப்பு குறித்து கடுமையாக சாடினார். புகழப்படக்கூடிய அளவுக்கு தகுதிவாய்ந்த தலைவர்கள் ஒருவர் கூட பாஜவிலோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ இல்லையா?. என்று மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

தங்கள் கட்சியின் முன்னோடிகளை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் படேலுக்கு உலக அளவில் பெரிய சிலையை பிரதமர் மோடி அமைத்ததற்கு என்ன காரணம் என்றவர்,  இந்த விழாவில், நேரு குடும்பத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது ஏன்? என்றும் கண்டனம் தெரிவித்தார்.

அக்டோபர் 31ந்தேதி என்றாலே,  மக்களுக்கு நினைவு வருவது உயிர் தியாகம் செய்த இந்திரா காந்தியை தான். அதை மறக்கடிக்க செய்யவே அன்றைய தினம் பிறந்த காங்கிரஸ் தலைவரான படேலுக்கு பாஜகவை சேர்ந்த மோடி சிலை அமைத்து உள்ளார் என்று குற்றம் சாட்டியவர், காங்கிரஸ் தலைவர்களான படேலையும், நேதாஜியையும், அம்பேத்கரையும் புகழ்ந்து பேசி அவர்கள் தங்கள் இயக்க ஆதரவாளர்களை போல சித்தரித்து காட்ட முயற்சி செய்வதை வரலாறு தெரிந்தவர்கள் நம்பமாட்டார்கள் என்றார். பிரதமர் மோடியே சிலை அமைத்து புகழும் அளவுக்கு வரலாற்று பெருமை காங்கிரசுக்கு தான் உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர் ஜோதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.