இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது வீரர்களின் தலைகளை வெட்டி எடுத்துச் சென்ற பாகிஸ்தானின் திமிருக்கு பழிதீர்க்க இந்திய ராணுவம் “ஆப்பரேஷன் ஜிஞ்சர்” என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தி பதிலுக்கு பதில் 3 பாகிஸ்தான் வீரர்களின் தலைகளை கொய்து கணக்கு தீர்த்த சம்பவம் குறித்த இரகசிய ஆவணங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்கள், வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஒரு ஆங்கில நாளிதழ் திரட்டியுள்ளது. அந்த ஆவணங்களில் உள்ள விபரம் பின்வருமாறு:
army
பாகிஸ்தான் இந்திய வீரர்களின் தலைகளை வெட்டியெடுத்து அந்த வெற்றியை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கையில் இந்திய முகாமில் அவர்களுக்கு மரண அடி கொடுக்கும் திட்டம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. அந்த தாக்குதலுக்கு “ஆப்பரேஷன் ஜிஞ்சர்” என்று பெயரிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் 7 ராணுவ நிலைகளின் நடமாட்டம் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டது. இதில் போலீஸ் சவுகி, ஹைபைசாத், லாஸ்தாத் தாக்குதல் நடத்த ஏற்றவையாக அடையாளம் காணப்பட்டன. அந்த ஆப்பரேஷனை நடத்த ஏற்ற ஆகஸ்ட் 30-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

doccu

’ஆப்பரேஷன் ஜிஞ்சர் ’ தொடர்பான இந்திய ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள்

ரகசிய தாக்குதலை அதிரடியாக நடத்த பாராசூட் பயிற்சியில் தேர்ந்த 25 கமாண்டோ வீரர்கள் தேர்வு செய்யப் பட்டனர். அவர்கள் தாக்குதலுக்கு முந்தய நாளான ஆகஸ்ட் 29-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு இந்திய எல்லையில் முகாமிட்டனர். இரவு 10 மணி வரை அங்கேயே பதுங்கி இருந்து நள்ளிரவில் எல்லையைக் கடந்து சரியாக ஆகஸ்ட் 30-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பாகிஸ்தானின் போலீஸ் சவுகி ராணுவ நிலையை அடைந்தனர்.
அங்கு சென்ற அவர்கள் ராணுவ முகாம்களை சுற்றி கண்ணி வெடிகளை புதைத்து வைத்தனர். காலை 7 மணிக்கு 4 பாகிஸ்தான் வீரர்கள் ரோந்துக்கு வர கண்ணிவெடி சரியாக வெடித்தது. வெடிச்சத்தம் கேட்டு அடுத்தடுத்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள் அனைவரையும் இந்திய கமாண்டோக்களின் இயந்திர துப்பாக்கிகள் பதம் பார்த்தது. இந்திய கமாண்டோக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் பர்வேஷ், அஷ்டப், இம்ரான் என்ற மூன்று பேரின் தலையையும் வெட்டி எடுத்தனர், அவர்களின் இராணுவ அடையாளங்கள், ஆயுதங்கள், தோள்பட்டையில் இருந்த பதக்கங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டனர்.
மேலும் தலையில்லாமல் கிடந்த இராணுவ வீரர் ஒருவரின் உடலின்கீழ் குண்டுகளை மறைத்து வைத்துவிட்டு ஆப்பரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தியோடு கமாண்டோக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்திய எல்லைக்குள் வந்தடைந்தனர். நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கே வந்தடைந்த பாகிஸ்தானின் வீரர்கள் சிலர் செத்துக்கிடந்த வீரரின் உடலை அசைக்க மறைத்துவைக்கப்பட்ட குண்டு வெடித்து அங்கேயே 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
நடத்தப்பட்ட ஆப்பரேஷனுக்கு ஆதாரமாக பாகிஸ்தான் வீரர்களின் தலைகள் புகைப்படம் எடுக்கப்பட்டன. பின்னர் அவை புதைக்கப்பட்டன. அதன் பிறகு இரு நாட்களுக்குப் பின் மூத்த அதிகாரி ஒருவரின் உத்தரவுப்படி அந்த தலைகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அவற்றின் சாம்பல் நதியில் கரைக்கப்பட்டது. இதன்மூலம் மரபணு தடயம் கிடைக்காத வகையில் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டன.