‘மிஸ்டர் கிளின்’ ராஜீவின் ஆளுமைக்கு பெருமை சேர்த்த ‘ஆபரேஷன் பூமாலை’!

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாள் மே 21, 1991 

உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி தமது 40 வயதிலேயே இந்தியாவின் ஆறாவது  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம். இந்திய மக்களை சொல்லோனா துயரத்திற்கு ஆட்படுத்தி, இவ்வுலகை விட்டு பிரிந்த தினம் இன்று.

‘மிஸ்டர் கிளின்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளை சேர்ந்த தற்கொலைப்படை பெண் ஒருவரால் அநியாயமாக கொல்லப்பட்ட தினம் இன்று.

இலங்கையில் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட ராஜீவ்காந்தி, அதே தமிழர்களால் கொல்லப்பட்ட கறுப்பு தினம் இன்று.

1991ம் ஆண்டு  21 மே 21ந் தேதி 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருப்பெரும் புதூர் அருகே நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், தற்கொலை பெண் ஒருவரின் குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கோர குண்டுவெடிப்பில் அவருடன் சேர்ந்து மேலும்  14 நபர்கள் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் மறக்க மற்றும் மறைக்க முடியாத இந்நாளில், இலங்கை தமிழர்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்த சிறப்பு பார்வை பத்திரிகை.காம் வாசகர்களுக்கு நினைவு கூறுகிறது.

1990ம் ஆண்டு, இலங்கை அதிபராக ஜெயவர்த்தனே இருந்த சமயம். அங்கு, விடுதலைப்புலி களுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இதன் காரணமாக இலங்கை தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து,  தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், அரசியல் கட்சித் தலைவரின் நடவடிக்கைகள், தமிழக அரசின் நெருக்குதல் ஆகிய எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் வகையில் ராஜீவ் காந்தி அரசு சில நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இதன் ஒருபகுதியாக,  ராமேஸ்வரம் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின ரால் தாக்கப்பட்டதையொட்டி, அந்தப் பகுதியில் இந்திய கடற்படையின் ரோந்துப் படகுகள் சுற்றிவர ஆரம்பித்தன.

அதுமட்டுமின்றி, ராமேஸ்வரத்தின் பயன்பாடற்ற விமானதளம் மீண்டும் செப்பனிடப்பட்டு, அங்கு ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல ஆரம்பித்தன.

இது குறித்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கூறுகையில், “”அண்டை நாடுகள் பிறநாடுகளில் பெற்றுள்ள அதிநவீன உளவுத் தகவல்கள், அந்நாடுகள் பெற்றுள்ள நவீன ஆயுதங்கள் -தளவாடங்களுக்கேற்ப இந்தியாவும் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆபரேஷன் பூமாலை என்ற ஒரு திட்டத்தை அதிரடியாக செயல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி.

இதையடுத்து. ஜூன் மாதம் 4ம் நாள் 1987வது வருடம் அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த அதிரடி நடவடிக்கையை பார்த்து உலகமே வியந்தது. இலங்கை செய்வதறியாது மிரண்டது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் , An 32 ரக விமானப்படை  விமானங்கள் ஆக்ராவில் இருந்து புறப்பட்டு பெங்களுர் வந்தடைந்தன. இதில்  இலங்கையில் சிங்கள ராணுவத்தினரால்  பாதிக்கப்பட்டு ள்ள தமிழர்களுக்கு தேவையான மருந்து மற்றும் உதவி பொருட்கள் நிரப்பப்பட்டு, இலங்கை நோக்கி புறப்பட பெங்களூருவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து.

இதுகுறித்து அன்று பிற்பகல் 3 மணிக்கு டில்லியில்  இலங்கை தூதர் அழைக்கப்பட்டு,  இந்திய விமானங்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, இலங்கை நோக்கி பயணிக்க இருப்பதாகவும், இந்த விமானம்,  இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு மேலே பறந்தபடி உதவி பொருட்களை வழங்கும்.

இதற்கு ஆபரேஷன் பூமாலை என்று பெயர் சூட்டி யுள்ளோம் என்றும், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை ராணுவம் தடுக்க முயற்சி செய்தால், இந்த விமானங்களுக்கு பாதுகாப்பாக வரும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தக்க பதிலடி தரும்  என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

1971ம் நடைபெற்ற இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்திய இராணுவம் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது அதுவே முதல் முறை.

இதற்காக அப்போதைய விமானப்படையின் சிறந்த விமானிகளான, அஜித் பவ்னானி தலைமையி லான விமானிகள் குழுவினர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

அவர்களுடன் 35 பேர் கொண்ட இந்திய பத்திரிகையாளர்கள் குழுவும் விமானத்தில் சென்றனர்.

பிற்பகல்  4 மணிக்கு இந்திய இராணுவ விமானங்கள் 1500 அடி  உயரத்தில் இலங்கையின் யாழ்நகரை வட்டமடித்தன.

பின் மருந்து மற்றும் உதவிப் பொருட்கள் விமானத்தில் இருந்து பாராசூட்கள் மூலம் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பாரசூட்கள் உடனுக்குடன் விரிந்து ஏற்கனவே உறுதிபடுத்தப்பட் பகுதிகளில் சென்று பொருட்கள் இறங்கின.

இந்திய விமானங்கள் இலங்கையின் விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறந்த போதும், இலங்கை அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை.

இந்த அதிரடி காரணமாக சுமார்  25 டன் உதவி பொருட்கள்  தமிழர்கள் வாழும் பகுதிக்கு விநியோகிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்தது. இதற்கு சாட்சியாக இருந்தவர்கள் அப்போது விமானத்தில் சென்ற 35 பத்திரிகையாளர்கள்.

சுமார் 2 மணி நேரத்தில் அனைத்து உணவு பொருட்களை பத்திரமாக இறக்கிவிட்டு,   மாலை 6 மணிக்கு மீண்டும் இந்தியா திரும்பி  பெங்களுரில் தரை இறங்கியது இந்திய விமானங்கள்.

ராஜீவ்காந்தியின் இந்த ஆபரேஷன் பூமாலை என்ற அதிரடி நடவடிக்கையின் காரணமாக, இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது இந்தியா.

இலங்கையில் நடக்கும் சிவில் யுத்தத்தை இந்தியா வேடிக்கை பார்க்காது என்று புரிய வைக்கவே இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இது என்று கூறப்பட்டது. இந்த ஆபரேஷன்  முழு வெற்றி பெற்றது.

ராஜீவின் ‘ஆபரேஷன் பூமாலை’ நடவடிக்கையால் இலங்கைஅதிபர் ஜெயவர்த்தனா  கலங்கிப் போனார்.

இதன்மூலம் தெற்காசியாவில் இந்தியாவின் மேலாட்சியையும் தான் ஒரு வல்லரசு என்பதையும் இந்தியா நிரூபித்ததாக இலங்கைப் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்தன.

இலங்கை வான் எல்லையில் இந்தியா அத்துமீறி நுழைந்தது. முற்று முழு தாக இது அத்துமீறல் என்றும், இன்று உணவுப் பொட்டலம், நாளை குண்டு வீச்சா” என்று கூக்குரலிட்டன.

ஜெயவர்த்தனாவும் தான் கருத்து சொல்ல விரும்பாமல், தனக்கு ஆதரவுப் பத்திரிகைகள், புத்த பிக்குகளை விட்டு பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் முடுக்கிவிட்டார்.

இதையடுத்தே இலங்கை தமிழர்களுக்கு உதவும் வகையில் இலங்கை இந்தியா ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன் காரணமாகவே 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு அரசு முறைப்பயணமாக சென்று அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே வுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ராஜீவ் காந்தியின் பினானல் இருந்து ரோஹன டி.சில்வா என்ற ராணுவ வீரர் திடீரென துப்பாக்கியின் கட்டையால் தாக்கினான்.

இதில் அதிர்ஷ்டவசமாக ராஜீவ் உயிர்தப்பினார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு காரணமா ராஜீவ் காந்தி நடத்திய ஆபரேஷன் பூமாலைதான் காரணம் என்று தாக்கிய ரோஹன டி.சில்வா என்பவர்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜீவின் நினைவுதினமான இன்று, அவரது ஆளுமையை நினைவு கூர்வதில் பத்திரிகை.காம் பெருமை கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.