ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

சென்னை,

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் முதல்வர்

ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களான, மைத்ரேயன்,  பொன்னையன், மதுசூதனன், பி.எச். பாண்டி யன் போன்றோரும்  உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஓ.பி.எஸ் அணியினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவடியில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.