புதுடெல்லி:

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கும் சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதுதான், உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலியா? என அகில இந்திய காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.


கடந்த செவ்வாய்க் கிழமை இந்தியாவுக்கு வந்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் அஸ்லாமை விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் மோடி அமோக வரவேற்பளித்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதமருக்கான அந்தஸ்தையும் மீறி இளவரசர் முகமது பின் அஸ்லாமுக்கு நேரில் சென்று மோடி வரவேற்பளித்துள்ளார்.

சவுதி இளவரசர் பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்துள்ளார். பாகிஸ்தானின் தீவிரவாத ஊக்குவிப்புக்கு உறுதுணையாக இருக்கும் இளவரசருக்கு பிரம்மாண்ட வரவேற்று அளித்ததின் மூலம், உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டீர்களா? விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆரத்தழுவதும், சிரிப்பதும் தான் உயிர் தியாகம் செய்தோருக்கு செய்யும் அஞ்சலியா?

 

ஜெய்ஸ்-இ- முகமது தீவிரவாதத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக  அறிவிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்வாமா தாக்குலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தது குறித்து, கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று சவுதி அரேபியா இளவரசரிடம் தைரியமாக கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
சவுதி இளவரசர், பிரதமர் மோடி,courage to ask Saudi Arabi