மழையை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் : அமைச்சர் உதயகுமார்

சென்னை

ழை மற்றும் வெள்ளத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

வட இந்தியாவில் தற்போது தென் மேற்கு பருவமழை முடியும் தறுவாயில் உள்ளது.  அடுத்ததாக தென் இந்தியாவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது.   மழை குறித்து தமிழகத்துக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அமைச்சர் உதயகுமார், “அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் மழைக்கால கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு இடப்பட்டுள்ளது.   அத்துடன் அனைத்து துறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு இடப்பட்டுளது.  ஆகவே ரெட் அலர்ட் குறித்து பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்.

தமிழக முதல்வர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பிருந்தே 4 ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளார்.   ஆகவே எதிர்க்கட்சிகள் மழை மற்றும் வெள்ளத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.    மழை குறித்து அறிவிக்கப்பட்ட அவசர தொலைபேசி எண்கள் 24 மணி நேரமும் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.