சென்னை :
 
வானொலியைப் பற்றி நினைக்கும் போது, ​​நாம் இப்போது வாழும் ஆன்லைன் உலகத்தையும், இணையத்தில் நாம் காணக்கூடிய ஒலிபரப்பு வாய்ப்புகளையும் ஒருபோதும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
ஆன்லைன் வானொலி மற்றும் இணைய வானொலி நிலையங்கள் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன, இவற்றைப் பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால், ஒலிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் அனைத்தும் பெரும்பாலும் மென்பொருளால் ஆன்லைனில் கையாளப்படுகிறது.
இணைய வானொலி நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் வானொலி நிலையத்தைப் போல தயாரிப்புக் குழுவையும் குழுவினரையும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது தமிழில் பல்வேறு ஆன்லைன் எப்.எம் சேனல்களின் வருகை பல புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இருந்தபோதும், இந்த சேனல்களுக்கு நேயர்களை அதிகரிக்க இதில் புதுமையை புகுத்திவருகின்றனர். சமீபத்தில் டான் எப்.எம். எனும் ஆன்லைன் சேனல் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டு பிரபலமாக இருப்பவர்களை கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் முயற்சியை செய்கிறது.
இதன் மூலம், இவர்களின் சேனல்களை விரும்பும் நேயர்கள், அதிகரித்திருப்பதாக கூறிவருகிறார்கள். விரைவில் இதுபோன்ற சேனல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாலும், இது போன்ற சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் முயற்சிகள் நடப்பதாலும், தற்போது வேலை இழந்து இருக்கும் திறமை உள்ளவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது புதிய வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


லைவ் ஸ்ட்ரீமிங், பாட்காஸ்ட் மற்றும் ஆன்லைன் ரேடியோ போன்றவை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதை விரைவில் காண்பீர்கள் என்கிறார்கள் மென்பொருள் நிபுணர்கள்.