கமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு……!

இந்தியன்-2 படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என லைக்கா நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன்-2 .

இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க அனுபவமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதில் எவ்வித வயது வரம்புமின்றி துணை கதாபாத்திரங்களில் நடிக்க ‘ஆர்வமுள்ள, நடிப்பில் தேர்ந்த’ நடிகர், நடிகையர்கள் தங்களது சுய விவரங்களை casting.indian2@gmail.com, இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.