அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை:

ரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகன்று  ஓமனை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும்,  தென்மேற்கு வங்கக் கடல் முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி வரை கடலோர கர்நாடகம், இலங்கை, குமரிக்கடல், உள் தமிழகம், வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதாக தெரிவித்த அதிகாரிகளி, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோர கர்நாடக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறினர்.

இந்த வளிமண்டல சுழற்றி காரணமாக,  அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள்பகுதியில் சில இடங்களிலும், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.