சென்னையில் தொழில் உரிமம் புதுப்பிக்க டிசம்பவர் 31 வரை அவகாசம்! மாநகராட்சி

சென்னை: தலைநகர் சென்னையில், தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிசம்பவர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிகர்கள், தொழிலதிபர்கள் தங்களது  தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அதற்கான அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. தறபோது இறுதியாக  31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை மாநகராட்சி, வருவாய் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021ம் நிதியாண்டில், 31.03.2020க்குள் புதுப்பிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.