டில்லி:

ச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.

மாநிலங்களவைத் தலைவர வெங்கையாநாயுடுவிடம் அவர் தனது ராஜினாமா கடத்தை கொடுக்க இருக்கிறார்.

அவர் எழுதியுள்ள கடிததத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் இருந்தது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசின் ஏதேச்சதிகார போக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர், விவசாயிகள், மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்.பி.யான, நவநீத கிருஷ்ணன், தற்கொலை செய்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில,  அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கடந்த 30ந்தேதி அறிவித்தார். அன்படி, இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி உள்ளார்.

இதுகுறித்து இன்று டில்லியில், செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத போது எனக்கு எதற்கு பதவி என்றும்   ராஜ்யசபா தலைவரான துணை குடியரசு தலைவரிடம்  தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்கள்  என்றாலும், இந்த விவகாரத்தில், நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறினார்.

இரண்டு ஆண்டுகள் எனது பதவிக்காலம் இருந்தாலும் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கூறினார்.