மின்வெட்டு என எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம்…..அமைச்சர் தங்கமணி
நாமக்கல்:
தேவையான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இது குறித்து அவர் நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘தமிழகத்தில் மழை மற்றும் காற்று அதிகமாக இருக்கிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் பாதுகாப்பு கருதி சமயங்களில் மின்சாரம் நிறுத்தம் ஏற்படுகிறது.
இதை மின்வெட்டு என கருதி எதிர்கட்சியினர் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தேவையான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது’’ என்றார்.