தகவலறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மறு ஆய்வு செய்ய கோரிக்கை

டில்லி

திர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலால் தகவலறியும் உரிமைச் சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன..

தகவலறியும் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து புதிய சட்ட மசோதாவாக மத்திய அரசில் அளிக்கப்பட்டது.   இந்த திருத்தம் மூலம் இந்த ஆணயத்தில் பணி புரிபவர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டது.    இதற்கு  காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்த சட்ட திருத்தத்தின் மூலம் மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க பாஜக எண்ணுகிறது.   மேலும் பதவியில் உள்ளவர்களை மக்கள் கேள்வி கேட்க கூடாது என கருதுகிறது.   இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் சட்டம் பயனற்றதாகி விடும்” என தெரிவித்திருந்தார்.

நாளை இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இந்நிலையில் அந்த மசோதா மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என மாநிலங்கள் அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன..