வீட்டுக்கு வீடு கண்காணிப்பா ? : பாஜக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்

டில்லி

த்திய பாஜக அரசு நாட்டில் உள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டரும் சோதிக்கப்பட உள்ளதாக அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேற்று பாஜக அரசின் உள்துறை செயலர் ராஜிவ் கவுபா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்    அந்த அறிவிப்பில், “மத்திய அரசு நாட்டில் உள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டர் மூலம அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் தகவல்கள்,  மற்றும் சேமிக்கப்பட்ட விவரங்களை ஆகியவற்றை சோதிக்க 10 மத்திய அரசின் அமைப்புக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அவை உளவுத் துறை, போதைப் பொருள் தடுப்புத் துறை,  அமலாக்க இயக்குனரகம், நேரடி வரி மையம், நிதித்துறை உளவகம், சிபிஐ, தேசிய புலனாய்வுத் துறை, ரா என்னும் மத்திய உளவு நிறுவனம், தகவல் துறை இயக்குனரகம் ஆகியவை ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, “இந்த உத்தரவின் மூலம் மோடி நமது நாட்டையே கண்காணிப்பி பகுதி ஆக்கி விட்டார்.  இது தனி மனித உரிமைக்கு எதிரானது.  இதன் மூலம் அரசு தனது அதிகாரத்தை காட்டி ஜனநாயகத்துக்கு மிரட்டல் விடுத்துள்ளது” என கூறி உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் இதை அபாயகரமான செயல் என குறிப்பிட்டுள்ளர்.  அத்துடன், “பாஜக அரசு இப்படித்தான் நடந்துக் கொள்ளும் என்பது நாம் அறிந்ததே.  விரவில் ஆட்சியில் மாறுதல் வரும்.   தனது புதைக்குழியை பாஜக தானே தொண்டிக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இந்த உத்தரவு நாட்டின் பாதுகாப்புக்கு என கூறினால் ஏற்கனவே அதற்காக மத்திய அரசின் துறைகள் உள்ள்ன.   அப்படி இருக்க பொதுமக்களை ஏன் அரசு பாதிப்படைய செய்ய வேண்டும்.  பொது மக்கள் கருத்தை சொல்லவும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

இடது சாரி தலைவரான சீதாராம் யெச்சூரில், “ஒவ்வொரு இந்தியனையும் ஏன் கிரிமினல் போல நடத்த வேண்டும்?   அரசின் இந்த ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் உத்தரவு சட்ட விரோதமானது.   அத்துடன் தொலைபேசி ஒட்டுக் கேட்பது ஆதார் தடை உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர் தலைவரான அசாதுதின் ஓவைசி தனது டிவிட்டரில், “மோடி ஒரு சாதாரண உத்தரவின் மூலம் தேசிய அமைப்புக்களை நமது செய்திகளுக்குள் நுழைய பயன்படுத்தி உள்ளார்.    வீட்டுக்கு வீடு மொடி என பாஜக சொன்னதன் பொருள் இதுதான் என தோன்றுகிறது. ” என பதிந்துள்ளார்.