திருவனந்தபுரம்

கி புயலை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கேரள முதல்வர் மீது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஓகி புயல் கன்யாகுமரி மாவட்டத்தை மட்டுமின்றி கேரளாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  நிவாரண நடவடிக்கைகள் மும்முரமாக நடை பெற்று வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.  ஆனால் நிவாரண நடவடிக்கைகள் சரியாக நடைபெறவில்லை என அங்குள்ள மீனவர்களும் எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.

இது குறித்த அங்குள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு :

”எதிர்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் புயல் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என குற்றம் சாட்டுகின்றன.  இது முழுக்க முழுக்க உண்மையே ஆகும்.   புயலில் சிக்கிய 690 மீனவர்களை மீட்க அரசு தனது முழு முயற்சியும் எடுத்ததாகக் கூறுகின்றது.   ஆனால் புயல் எச்சரிக்கையை சரியான நேரத்தில் தெரிவித்திருந்தால் மீனவர்கள் கடலுக்குள் சென்றிருக்க மாட்டார்கள்.   அதே நேரத்தில் அரசுக்கு கடற்படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை உதவ முன் வந்தும் அரசு அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.   மீனவர்களே அவர்கள் உறவினரைக் கடலில் சென்று மீட்க முயன்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் பகுதியைப் பார்வையிட முதல்வர் வரவில்லை.  இந்த புயலினால் இந்தப் பகுதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.  ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை அந்த இடத்தை திங்கள் அன்று பார்வையிட வரப்போவதாக ஞாயிறு அன்று செய்திகள் வந்த.  உடனே திடீரென முதல்வர் ஞாயிறு அன்று அந்தப் பகுதியை பார்வை இட வந்தார்.  அங்குள்ள மக்கள் அவருடைய வாகனத்தை முற்றுகை இட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து அவரை அங்கு அனுமதிக்கவில்லை.  வாகனத்தை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்தனர்.  தனது உடன் வந்த மற்றொரு அமைச்சரின் வாகனத்தில் ஏறி முதல்வர் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளார்.

அலைகள் கடுமையாக இருக்கும் என தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் 28ஆம் தேதியே எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.   ஆனால் தனக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை என தெரிவித்த முதல்வர் 29ஆம் தேதி அன்று வீசிய புயலுக்கு 30ஆம் தேதிதான் நிவாரண நடவடிக்கையை தொடர்ந்துள்ளார்.   ஏற்கனவே வானிலை அறிக்கை சென்ற வருடம் மட்டும் 2000 எச்சரிக்கை கொடுத்துள்ளது.  அதனால் மீனவர்கள் அதை நம்பவில்லை.   ஆனால் அரசு புயல் பற்றி முன் கூட்டியே தெரிந்திருந்தும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என தெரிவித்துள்ளனர்.