Random image

ஆர் எஸ் எஸ் தலைவரின் சிங்கம் – நாய் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

டில்லி

ர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சிகாகோவில் நடைபெற்ற இந்து மாநாட்டில் பேசிய கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் சுவாமி  விவேகானந்தர் கலந்துக் கொண்டு உரை ஆற்றினார்.  இந்த நிகழ்வின் 125ஆம் ஆண்டு விழாவை ஒட்டி வெள்ளிக்கிழமை அன்று 2 ஆம் உலக இந்து மாநாடு சிகாகோவில் நடைபெற்றது.   அந்த விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “இந்து சமூகத்தினர்  எந்த விதமான பேதமும் இன்றி ஒன்றாக செயல்படவேண்டும்.    அப்போது தான் சமூகம் முன்னேறும்.   ஒரு சிங்கம் தனியாக இருந்தால் நிச்சயம் அதை நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி விடும்.  அதை நாம் மறாக்கக் கூடாது.   நாம் உலகை மேம்படுத்தி நமது ஆளுமையை மற்றவர்களுக்கு விளங்க வைக வேண்டும்.” என பேசினார்.

இதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இஸ்லாமிய கட்சி தலைவரான அசாதுதீன் ஓவைசி, “ஆர் எஸ் எஸ் எப்போதுமே மற்றவர்களை அவமானப்படுத்துவைதை வழக்கமாக கொண்டுள்ளது.    இந்துக்கள் அல்லாதவர்களை நாய் என அழைத்து தங்களை சிங்கம் என அழைப்பது கண்டிக்க தக்கதாகும்” என கூறி உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரான பிரகாஷ் அம்பேத்கார், “மோகன் பகவத் நாய்கள் என அழைப்பது எதிர்க்கட்சிகளை என்பது அனைவரும் அறிந்ததே.  மோகன் பகவத் எதிர்க்கட்சிகளை நாய்கள் என குறிப்பிட்டுள்ளதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். “ என கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் சாவந்த், “ஆர் எஸ் எஸ் கொள்கைகளே இந்துக்களுக்கு எதிரானது.  மற்ற ஜாதி மதம் குறித்த ஆர் எஸ் எஸ் வெறுப்பை அனைவரும் அறிவார்கள்.   ஆர் எஸ் எஸ் தலைவர் இவ்வாறு  பேசியதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.