அரசை எதிர்க்கட்சிகள் மட்டுமே விமர்சிக்கின்றன… மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

ஓசூர்:

மிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மட்டுமே விமர்சிக்கின்றன… மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறினார்.

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

தமிழக அரசின் பல்வேறு மக்கள் விரோத நடடிவக்கைகள் காரணமாக, பொதுமக்களிடையே ஆளும் அதிமுக அரசு மீது அதிருப்தி நிலவி வருகிறது. அதுபோல தமிழக அரசு மீது பல்வேறு வழக்குகளும் பாய்ந்துள்ளன. இந்த வழக்குகளின் விசாரணையின்போது தமிழக அரசை நீதிபதிகள் காய்ச்சி எடுக்கின்றனர்.

இதற்கிடையில் நெடுஞ்சாலை துறை ஊழல் தொடர்பாக முதல்வர் மீது திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல குட்கா வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோ கார்பன் விவகாரம், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு  போன்றவற்றால் தமிழக மக்களிடையே அதிமுக அரசு மீது கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஓசூலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, ரூ. 28 லட்சம் மதிப்பிலான புதிய தீயணைப்பு வாகனத்தை தீயணைப்பு துறை அதிகாரியிடம் அமைச்சர் ரெட்டி வழங்கினார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராகவே இருக்கிறது என்று கூறினார்.

மேலும், தமிழக அரசு திறமையாக ஆட்சி செய்து வருவதாகவும், அரசின் செயல்பாடுகளை  மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் மட்டுமே அரசை விமர்சித்து தொல்லை கொடுத்து வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேசினார்.