” ஊர்ப் பெயர்களை ஜோதிடர் மாற்றச்சொன்னாரா?’’

தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை அண்மையில் மாநில அரசு மாற்றி உள்ளது. சென்னையில் சைதாப்பேட்டையில் தொடங்கி ஸ்ரீவில்லிப்புத்தூர் வரை ஆயிரத்து 18 நகரங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன.

இந்த பெயர் மாற்றம் தமிழ் அறிஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை   அமைச்சரும், தி.மு.க.சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசுவும், பெயர் மாற்றத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘’ ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கு இது தான் தருணமா? நகரங்களின் பெயர்களை மாற்றினால் , கொரோனா வைரஸ் , நாட்டை விட்டி ஓடிவிடும் என்று இந்த அரசாங்கத்திடம், ஜோதிடர் யாராவது சொன்னார்களா?’’ என்று கொந்தளிக்கிறார், தென்னரசு.

ஆனால் பெயர் மாற்றத்தை அரசு தரப்பில் நியாயப்படுத்துகின்றனர்.

’’ இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள், தாங்கள் உச்சரிப்பதற்கு வசதியாக ஊர்ப் பெயர்களை மாற்றிவிட்டனர். இப்போது, முன்னர் உச்சரித்தபடி, பழைய பெயர்களைச் சூட்டியுள்ளோம்’’ என்கிறார், அரசாங்க அலுவலர் ஒருவர்.