டில்லி:

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதி அன்று தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் ஒரேநாளில் செல்லாததாகி விட்டது.

இது இந்திய பொருளாதார சரிவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. அடுத்த மாதம் 8-ம் தேதியுடன் பணமதிப்பிழப்பு அறிவித்து ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

அன்றைய தினம் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த திட்டுமிட்டுள்ளன. இது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தை 6 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனைக்கு பிறகு குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது முதல்கட்ட ஆலோசனைதான். அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு எங்கள் திட்டம் பற்றி அறிவிக்கிறோ’’ என்றார்.