ராகுல் காந்தி தலைமையை தானாகவே எதிர்க்கட்சிகள் ஏற்பார்கள் : மல்லிகார்ஜுன கார்கே
டில்லி
எதிர்க்கட்சிகள் தானாகவே ராகுல் காந்தியின் தலைமையை ஏற்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.
வரும் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அணி உருவானால் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேர்தலுக்கு பிறகு அது முடிவு செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே செய்தியாளர்களிடம், ”நாட்டு மக்கள் பாஜகவை அகற்ற ராகுல் காந்தியை எதிர்நோக்கி உள்ளனர். நாட்டில் அனைவரும் அவரை புகழ்கின்றனர். ராகுலுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அவர் அளவுக்கு நாடெங்கும் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் வேறு யார் உள்ளனர் ?
ராகுல் ஒருவர் மட்டுமே இவ்வளவு செல்வாக்குடன் உள்ளார். எனவே இன்று இல்லை என்றாலும் நாளை அவர் தலைமையை எதிர்க்கடிகள் தானாகவே அவர் தலைமையை ஏற்பார்கள். வரும் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கொள்கை போராட்டமாக அமையும். இதில் ராகுல் உறுதியாக இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.