மனோகர் பாரிக்கரை பணி புரிய வைத்த மனித நேயமற்ற பாஜக :  எதிர்கட்சிகள் கண்டனம்

னாஜி

டல்நிலை சரியில்லாத நேரத்தில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பணி புரிய வைத்தமைக்காக பாஜக வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு டில்லி, மும்பை, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்றார்.   கடந்த அக்டோபர் 14 முதல் அவர் தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.    இதை ஒட்டி முதல்வர் இல்லாமல் அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின.

நேற்று  மனோகர் பாரிக்கர் தலைநகர் பனாஜி அருகே உள்ள இரு பாலக் கட்டுமான வேலைகளை பார்வை இட்டார்.    சுமார் இரு மாதங்களுக்கு பின்பு அவர் கலந்துக் கொண்ட பொது நிகழ்வு இதுவே ஆகும்.   அப்போது அவர் மூக்கில் குழாயுடனும் இரு மருத்துவர்கள் உதவியுடனும் அங்கு வந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.    இவ்வாறு உடல் நலம் குன்றிய கோவா முதல்வரை பணி புரிய வைத்த பாஜகவை பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ”கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மூக்கில் டியூப் செலுத்தபட்டுள்ளது. இவ்வளவு மோசமான உடல்நிலையில் உள்ளவரை பணி புரிய வைத்து அதை புகைப்படமாகி பதிவது மனித நேயமற்ற செயலாகும்.  அவரை ஓய்வெடுக்க விடாமல் ஏன் பணி புரிய வற்புறுத்த வேண்டும்?” என கேள்விகள் எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி தனது டிவிட்டரில், “கோவா முதல்வரின் மூக்கில் டியூப் உள்ளதா?  இந்த நிலையில் உள்ள மனிதரை பணி செய்ய வைக்கும் அளவுக்கு ஒரு கட்சிக்கு அதிகார பசி இருக்குமா?  பதவி அதிகாரத்துக்காக பாஜக யாரையும் விட்டு வைக்காது.    முதல்வர் அவர்களே உங்கள் உடல் நலனை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.   உங்கள் கட்சி நிச்சயம் உங்களை கவனிக்காது” என பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி