காஷ்மீர் விவகாரத்துக்கு எதிர்ப்பு, முத்தையா முரளிதரனுக்கு ஆதரவு! மாறுபட்டு நிற்கும் விஜய்சேதுபதி

மெல்போர்ன்:

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமானது இங்கிலாந்து மெல்போர்ன் நகரில் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மக்களுக்கு எதிராக வும், இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த, இலங்கை முன்னாள் கிரிக்கெட் பிளேயர்  முத்தையா முரளிதரன் கேரக்டரில்  நடிப்பது உறுதி என்றும் கூறி உள்ளார்.

விஜய்சேதுபதியின் மாறுபட்ட கருத்து தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் கலந்து கொள்வ தற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள விஜய்சேதுபதி நடித்த,  சூப்பர் டீலக்ஸ் திரைப்படத் திற்காக சிறந்த நடிகர் விருது  பெற்றார்.

அதைத்தொடர்ந்து அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரம் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்திய திரைப்படவிழா நடைபெற்றது. இதில், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி, தியாகராஜா குமாரராஜா, நடிகை காயத்ரி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

அங்குள்ள  தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார்.  காஷ்மீரின் பிரச்னை களுக்கு அந்த மக்கள்தான் முடிவெடுக்க முடியும்.

உங்கள் வீட்டு விவகாரத்தில் நான் தலையிட முடியாது. ஏனெனில் அந்த வீட்டில் வாழ்பவர்க ளுக்கே அதன் சூழ்நிலை தெரியும். ஆகையால் நான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள லாம். ஆனால் ஆளுமை செலுத்தமுடியாது”. என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்

மேலும் தொடர்ந்த அவர் “ ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ளும் போது, மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் மீது ஆளுமை செலுத்துவது முறையற்றது.” என விஜய் சேதுபதி கூறினார்.

அதுபோல, தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்ட தற்கு வரவேற்பு தெரிவித்தும்  இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் போர் நடைபெற்றபோதுகூட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்காதவர்.  போர் முடிந்தபின்னரும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை.

இப்பேர்பட்ட தமிழினி விரோதியின் கேரகடர் கொண்ட படம் ஒன்றில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தயது இது தொடர்பாக பல அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வானொலி பேட்டியின்போது நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்த விஜய்சேதுபதி,

இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப்பேசும் திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என நடிகர் விஜய் சேதுபதி என தெரிவித்தார்.

‘விஜய்சேதுபதியின் மாறுப்பட்ட கருத்து மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.