ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு: மனைவியுடன் பேராசிரியர் ஜெயராமன் கைது!

நன்னிலம்,

ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோது மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ள அவர், நன்னிலம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியபோது, மனைவியுடன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஓ.என்.ஜி.சி இயற்கை எரிவாயு எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதி மக்களுக்க ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட பேராசிரியர் ஜெயராமன் தனது மனைவி சித்ரா மற்றும் ஆதரவாளர்களுடன்  நன்னிலத்துக்கு வருகை தந்தனர். இதையறிந்த போலீசார், ஜெயராமன் உட்பட 4 பேரையும் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.