புல்வாமா தாக்குதல் : எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவு – ராகுல் காந்தி உறுதி

டில்லி

தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தி நடந்த ஜெய்ஷ் ஈ அகமது தீவிரவாத இயக்க தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.   தற்கொலைப் படை தீவிரவாதி 350 கிலோ எடை உள்ள  வெடி மருந்து  நிரப்பிய ஸ்கார்ப்பியோ வாகனத்தை மோதி இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.

டில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளரை சந்தித்தனர்.  அப்போது ராகுல் காந்தி, “காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல் மிகவும் வெறுக்கத்தக்கது.

பாதுகாப்புப் படை மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதராவாக இருக்கும்.    இந்த நாடு இறந்த மாவீரர்களின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கும்.    நமது நாட்டை  பிளவு படுத்தவே பயங்கரவாதிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆனால் இந்தியாவை எந்த ஒரு சக்தியாலும் பிளவு படுத்த முடியாது.

பயங்கரவாதிகளின் எண்ணம் எப்ப்போதும் நிறைவேறாது.  அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தாமல் உள்ளது.   ஆனால் இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு துணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kashmir attack, opposition will support govt, rahul gandhi, அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு, காஷ்மீர் தாக்குதல், ராகுல் காந்தி
-=-