Random image

சிகரெட்டுக்கு எதிர்ப்பு… கஞ்சாவுக்கு மாவட்ட தலைவர் பதவியா?: சமூகவலைதளங்களில் பா.ம.க.வை கடுமையாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்

ஞ்சா விற்றதாக பாமக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பா.ம.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்  சென்னை பல்லவன் சாலை அருகே கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்பதும் அவர் பெயர் சரவணன் என்பதும் தெரியவந்தது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரவென பரவியது. 

“சர்கார்”  பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல இருந்ததால் அதை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். பாமகவினரும் சமூகவலைதளங்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் பாமகவினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் நிலவியது.

இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்தததாக பாமக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த விஜய் ரசிகர்கள் ஹேஷ் டேக்குகள் மூலமாகவும், மீம்ஸ்கள் மூலமாகவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

தனால் ட்விட்டர் தளத்தில் தமிழகம் அளவில் ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்ட்டானது. இப்போதும் அதில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பலத்த கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சரவணன் தற்போது பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார்.