மீண்டும் முதல்வர் ஆவார் ஓ.பி.எஸ்.!: மு.க.ஸ்டாலின் ஆரூடம்

“மீண்டும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்பார்” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பொறுப்பேற்க இருப்பது குறித்து, மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது:

“மறைந்த முதல்வர் ஜெயலலிதா எந்த ஒரு தருணத்திலும் கட்சியிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு பொறுப்பு அளிக்கவில்லை. தனக்குப் பிறகு சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னதில்லை.

அவர் ஓ.பன்னீர் செல்வத்தைத்தான் முன்னிறுத்தினார்.  ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற போது ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வர் ஆனார்.

இப்போது சசிகலா முதல்வர் ஆவார் என்பது கேலிக்கூத்தாக, கேவலமாக இருக்கிறது” என்று தெரிவித்த ஸ்டாலின், “சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒருவார காலத்தில் அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது சசிகலாவுக்கு தண்டனை கிடைக்கும். அதன்பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்பார்” என்று தெரிவித்தார் ஸ்டாலின்.