சொத்துக்குவிப்பு: ஓபிஎஸ் மீதான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

--

சென்னை:

துணைமுதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதன் காரணமாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

திமுக தாக்கல் செய்திருந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், சொத்துக்களை  தனது மனைவி மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் பெயர்களில் வாங்கி வைத்துள்ளதாகவும்,  இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று;ம, 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது ஓபிஎஸ் மனைவிக்கு ரூ.24.20 லட்ச சொத்துகள் இருந்ததாக குறிப்பிட்ட ஓபிஎஸ், 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ரூ.78 லட்ச மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புவதாகவும் திமுக சட்டத்துறை செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின்பேரில் இதுவரை லஞ்சஒழிப்பு துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இதுகுறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்  முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

You may have missed