கிண்டி ஆளுநர் மாளிகை

சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், துணைமுதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்க இருப்பதாகவும், வீட்டு வசதித்துறை, குடிசைமாற்று வாரியம் ஒதுங்கப்படுவதாகவும்,   மா.பா.பாண்டிய ராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும் ஒதுங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியுடன் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த நிதி மற்றும் வீட்டுவசதித்துறை பறிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்கிறார்.

செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரனிடம் இருந்த பொறுப்புகள் மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் மாலை 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.