எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா பேனரில் ஓபிஎஸ் ‘மிஸ்ஸிங்…..!’ அதிமுகவில் பரபரப்பு

சென்னை:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு பொன்விழாவுக்காக அமைக்கப்பட்டு உள்ள பெரும்பாலான பேனர்களில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படம் விடுபட்டுள்ளது. இது அதிமுகவில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா  மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன் விழா சென்னை ஒஎம்சிஏ மைதானத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.

இந்த நிகழ்சியில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டிடிவி தினகரன் உள்பட பலர் பங்கேற்க இருப்பதாக அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனரில் ஓபிஎஸ் படம் விடுபட்டுள்ளது.  விழா தொடர்பாக  மாநகர  பேருந்துகளின்  பின்னாள் வைக்கப்பட்டுள்ள  விளம்பர போர்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி படம் மட்டும் போடப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் படம் இடம்பெற வில்லை.

இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை உருவாக்கி வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: OPS photo avoided in MGR Century Completion Festival Banners, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனரில் ஓபிஎஸ் 'மிஸ்ஸிங்.....!' அதிமுகவில் பரபரப்பு
-=-