49வது ஆண்டு தொடக்கம்: அதிமுக சார்பில் 28 மாணவர்களுக்கு ரூ.27 லட்சம் கல்வி நிதி வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுகவின் 49வது ஆண்டு இன்று தொடங்கியுள்ள நிலையில், அண்ணா தி.மு.க. சார்பில் 28 மாணவ மாணவிகளுக்கு 26 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கல்வி நிதியை துணை முதலமைச்சரும், . தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழக கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதையடுத்து,    மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் 28 ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி நிதியுதவியாக, மொத்தம் 26 லட்சத்து 39 ஆயிரத்து 778 – ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கினார்.

நிதியுதவி பெற்ற மாணவ, மாணவியர்களின் விபரம்:

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வரும் மாணவ, மாணவியர்கள்:

எஸ்.ஜெ. சூரியபிரகாஷ், (எமனேஸ்வரம், பரமக்குடி), எம். சுர்ஜித், (ராமேஸ்வரம்),

வி. மேகலா, ( அணவயல், ஆலங்குடி), எஸ். அரிகரன் (மீன்சுருட்டி, அரியலூர்),

டி. லோகேஸ்வரன் (சக்கம்பட்டி, ஆண்டிபட்டி), வி.மாதவன், (கணேஷ் நகர், கோவில்பட்டி), டி. கார்த்திக் (ஏ. புனவாசல், கடலாடி), எம்.மகேஸ்குமார் (மோர்பண்ணை, திருவாடானை)

கே.சாந்தினி (செங்கொல்லை, தஞ்சாவூர்), டி. இலக்கிய எழிலரசி (அண்ணாநகர், சாயல்குடி)

பி. கோகிலா (தேவிபட்டினம், ராமநாதபுரம்), ஏ. ஜெயஸ்ரீ (கிருஷ்ணாபுரம், சேலம்)

ஆர். பிரியதர்ஷினி (கண்ணன்குறுக்கை, திருவண்ணாமலை), எம்.சரவணகுமார் (திருவட்டத்துரை, கடலூர்),

எம். சந்திரமௌலி (நவலை கிராமம், தருமபுரி), ஆர். மனோஜ்குமார் (வாலாந்தரவை, ராமநாதபுரம்)

ஆர். செல்வபாண்டி (பூசேரி, கடலாடி), எம். விக்னேஷ் (சக்கம்பட்டி, ஆண்டிபட்டி),

எஸ். சரிதா (குலசேகரக்கால், ராமநாதபுரம்), கே.மோகனா (சத்தியமங்கலம், ஈரோடு)

ஆர். குட்ரோஸன் (பூசேரி, முதுகுளத்தூர்), ஜி.கே. பூபாலன் (கூடமலை, சேலம்)

எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி:

எஸ். அபிநந்தினி (காட்டுவேப்பிலைப்பட்டி, வாழப்பாடி)

பி.டி.எஸ். மற்றும் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவ, மாணவிகள்

எஸ். படையப்பா (பேராவூர், ராமநாதபுரம்), எம். கெய்சரின் ஷோபியா (மொட்டனூத்து, ஆண்டிபட்டி)

ஜி. சௌமியா (தாமரை ஊரணி, ராமநாதபுரம்), பி. யுவராஜ் (மீனாட்சிபுரம், தேனி), கே.வி. சிநேகா (பத்ராவதி, கர்நாடக மாநிலம்)

ஆகியோருக்கு நிதி உதவிகளை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.