முதல்வராக சதித் திட்டம் தீட்டியதால்தான் தினகரனை ஜெயலலிதா நீக்கினார்: ஓபிஎஸ்

ட்டி

டந்த 2008-ம் ஆண்டு ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே முதல்வர் ஆகலாம் என சதித் திட்டம் தீட்டியதால் தினகரனை ஜெயலலிதா கட்சியை விட்டே நீக்கினார் என எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

ஊட்டியில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா ஊட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர்,  துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:

”சசிகலாவின் குடும்பத்தினர் 16 பேரை அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். சதி அதிமுகவுக்கு துரோகம் செய்ததாக வெல்லும், ஆனால், அந்த வெற்றி நிரந்தரமல்ல.  அது போல நாங்கள் அசந்த நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார்; இன்னொரு முறை அது போன்ற தவறு நடக்காது.

தினகரன் ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்வர் ஆகலாம் என சதித் திட்டம் தீட்டியவர். யார் எத்தனை சதித் திட்டம் தீட்டினாலும், அதிமுகவை வீழ்த்தவோ அசைக்கவோ முடியாது.  இதற்காக அவரை கட்சியை விட்டே ஜெயலலிதா நீக்கினார்.

ஜெயலலிதா தான் உயிருடன் இருக்கும் வரையில் தினகரனை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். சசிகலா மன்னிப்பு கடிதம் தந்தபின் பாவம் பார்த்து ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். டிடிவி தினகரன் தரப்புதான் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது.

நான் அதிமுகவில் 19 ஆண்டுகளாக இருந்த நிலையில் எல்.கே.ஜி படிக்க பெரியகுளம் வந்தவர்தான் இந்த டிடிவி தினகரன். டிடிவி தினகரன் தரப்புதான் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது.

ஜெயலலிதாவால் 2008 லேயே எந்தக்கூட்டத்திலும் கலந்துக் கொள்ளக் கூடாது என ஒதுக்கப்பட்டவர் தினகரன். டிடிவி தினகரனுக்கு கட்சிக்கு உயிர்கொடுத்த தியாகிகளின் வரலாறெல்லாம் தெரியாது.  அவர்தான்  என்னை அறிமுகப்படுத்தியதாக தினகரன் கூறுகிறார்.   ஆனால் டிடிவி தினகரனை சந்திக்கும் முன்பே பெரியகுளம் வார்டு பிரதிநிதியாக நான் இருந்துள்ளேன்”  என ஓபிஎஸ் பேசினார்.