ஓபிஎஸ் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு: உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டில்லி:

டப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேர் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து டிடிவி தொடர்ந்துள்ள மேல்முறையீடு வழக்கு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்க வழக்கின் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்த ரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் கடந்த மாதம் (ஜூன்) 26ந்தேதி  உச்ச நீதி மன்றம்தில் மேல்முறையீடு  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

எடப்பாடி தலைமையிலான  அரசு சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில்  தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிடிவி சார்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.