ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரி திமுக வழக்கு: உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை

டில்லி:

துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட  11 எம்.எல்.ஏ.க்களை  தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதி மன்றம் வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது.

எடப்பாடி அரசுக்கு எதிராக  கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்களித்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேர் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்ற சென்னை  உயர் நீதி மன்ற தீர்ப்பை  எதிர்த்து திமுக சார்பில், திமுக கொறடா உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த  வழக்கை கடந்த ஜூலை மாதம்   விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கில் 11 எம்எல்ஏக்கள், சட்டசபை செயலாளர், அதிமுக கொறடா உள்பட அனைவரும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ஒபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், நிராகரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.