Random image

தகுதி நீக்க வழக்கு: ஓபிஎஸ் உள்பட அனைவருக்கும் உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி:

ஓபிஎஸ் தரப்பினர் மீதான தகுதி நீக்க மேல்முறையீட்டு வழக்கில்,  தமிழக சட்ட சபை செயலாளர் உள்பட அனைவருக்கும்  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

டப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேர் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்ற சென்னை  உயர் நீதி மன்ற தீர்ப்பு எதிர்த்து டிடிவி சார்பில்  தொடர்ந்துள்ள மேல்முறையீடு வழக்கு  உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கில் 11 எம்எல்ஏக்கள், சட்டசபை செயலாளர், அதிமுக கொறடா உள்பட அனைவரும் , 4 வாரங்களுக்குள் பதிலளிக்க கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தது.

எடப்பாடி தலைமையிலான  அரசு சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில்  தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிடிவி சார்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான இன்றைய விசாரணையில் உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.