சென்னை,

சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்  கூவத்தூர் போன ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார்.

இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க கூவத்தூர் செல்வேன் என்று ஓபிஎஸ் கூறினார்.

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ்க்கு ஆதரவான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,  நத்தம் விசுவநாதன், செம்மலை, பொன்னையன் ஆகியோர் ரிசார்ட்டில்அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்கப் போன போது கோவளம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தற்போது கூவத்தூர் பகுதியில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அந்த பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க மறுத்து வருகின்றனர் போலீசார்.

இதன் காரணமாகவே ஓபிஎஸ் ஆதரவி பாண்டியராஜன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றால் ஏதேனும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று காரணம் சொல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கூவத்தூர் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,

அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. ரிசார்ட்டில் தங்கியுள்ள அனைவரையும் அழைத்து வர சென்று கொண்டிருக்கிறோம் என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆனால், போலீஸ் தடுத்து நிறுத்தியதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாதி வழியில் திரும்பினர். மேலும், கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள்  அனைவரும் இன்று  மாலைக்குள் திரும்புவார்கள் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.