ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதி மன்றம் ஒத்திவைப்பு!

டில்லி,

மிழகத்தில் ஓபிஎஸ் அணியினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் திமுக தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறி 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்.

 

அதிமுகவில் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமாக, டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்க ளின் பதவி செல்லாது என அதிமுக கொறடாவின் வற்புறுத்தலின்பேரில், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுக சார்பில் கட்சியின் கொறடா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திமுக வழக்குக்கு எதிராக,   ஓபிஎஸ் அணி  11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உரிமையில்லை என்று கூறியும்,  உச்சநீதிமன்றம்தான் விசாரணை நடத்த வேண்டும்  முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான செம்மலை மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் இதுகுறித்து அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இதனை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்தது.

இதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான செம்மலையின் கோரிக்கையை நிராகரித்தார்.

இதனை தொடர்ந்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.