ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி:

டப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்த ஓபிஎஸ் மற்றும்  11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெ.மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டது. ஜெ. உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதால் ஓபிஎஸ் வெளியேறி தனி அணியக செயல்பட்டடார். இதற்கிடையில் ஆட்சி பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார். ஆனால், அவரை சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குள் தள்ளியவது மத்திய அரசு. அதைத் தொடர்ந்து சசிலா ஆதரவாளரான எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது,  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி அரசு வெற்றி பெற்றது.

சிறிது காலத்தில் இரு அணிகளும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து, திமுக சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் இன்று விசாரித்து வருகிறது.