சென்னை:.

திமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி,  அமைச்சர்கள் தான்தோன்றி தனமாக பேட்டி அளித்து வருகின்றனர் என்றும், இவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கே.பி.முனுசாமியின் கேள்விக்கு பதில் அளித்து, எடப்பாடி அணியை சேர்ந்த வைத்திலிங்கம் எம்.பி.  ஓ.பி.எஸ். அணியினர் மாறி மாறி பேசுவது பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது.

எங்களை தொடர்பு கொள்ளுமாறு ஓ.பி.எஸ். அணியினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளோம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்தியலிங்கம் பேட்டி யளித்துள்ளார்.

இரு அணியினரும் மாறி மாறி பேசி வருவதால் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.