ஓ.பி.எஸ். அணியினர் மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்களை சந்திக்கிறார்கள்

ஓ.பி.எஸ். அணியினர் இன்று மாலை மக்கள நலக்கூட்டியக்க தலைவர்களை சந்திக்கிறார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கு  ஆதரவளிக்கக்கோருவார்கள் என தெரிகிறது.

ம.ந.கூட்டியக்கத்தில் உள்ள  சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று மாலை சி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் கூடி, கலந்தாலோசனை செய்கிறார்கள். அதன் பிறகு அங்கு ஓ.பி.எஸ். அணியினர் வந்து ஆதரவு கேட்பார்கள் என்று கூறப்படுகிறது.