மதுசூதனனை சித்திரவதை செய்கிறார் ஓ.பி.எஸ்.!: டி.டி.வி. தினகரன் ஆதங்கம்

 

சென்னை:

ள்ளாத வயதில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தி சித்திரவதை செய்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வின் இரு அணிகள் மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டி.டி.வி. தினகரன் இடையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “என் மீது எதிரணி வேட்பாளர் மதுசூதனன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். பூனைக்கு மணி கட்டிவிட்டால் உலகம் இருண்டுவிடும் என்ற நினைப்பில் அவர் இருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதுசூதனன் பாவம். தள்ளாத வயதில் தடுமாறும் அவரை வேட்பாளராக நிறுத்தி சித்திரவதை செய்துவருகிறார் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.