ஓபிஎஸ் சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்! எடப்பாடி அணியினர் அதிர்ச்சி

 

சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று, முதல்நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குகிறார்.

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் தோழியான  சசிகலா அதிரடியாக நுழைந்து கட்சியை கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து கட்சி இரண்டாக உடைந்தது.

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தனி அணியாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இரு அணிகளும் இணைய மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சி செய்து வந்தனர். ஆனால், எடப்பாடி அணியினர் ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை ஏற்க முன்வராததால் பேச்சு வார்த்தை தொடங்காமலேயே முறிந்தது.

இதையடுத்து, ஜெயலலிதா மரணத்தி நீதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கடைசி நாள்  கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்கிறார்.

இந்தப் பயணத்தின் போது மாநிலம் முழுவதும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார் ஓபிஎஸ். காஞ்சிபுரத்தில் தொடங்கும் இந்த சுற்றுப்பயணம் கன்னியாகுமரி வரையில் முடிகிறது. அப்போது, 32 மாவட்டங்களுக்கும் சென்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் களை ஓபிஎஸ் சந்திக்கிறார்.

இந்த பயணத்தின் போது, ஜூலை மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அதில் போட்டியிடுவது பற்றியும் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதன் காரணமாக எடப்பாடி அணியினர் பரபரப்புடன் காணப்படுகின்றனர்.