ஓ.பி.எஸ். vs  சசிகலா: காங்கிரஸ் யார் பக்கம்?

தற்போது அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி நடக்கும் நிலையில் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி – அதன் எம்.எல்.ஏக்கள் – யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பது குறித்து பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகின்றன.  இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறும்.

இந்த நிலையில் காங்கிரஸ் வட்டாரம் தெரிவிப்பதாவது:

“தமிழக அரசியல் சூழ்நிலைகளை அகில இந்திய காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துவருகிறது. நாளை காலை தமிழக காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், மற்றும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டாக்டர்.செல்லக்குமார் உள்ளிட்ட மூத்ததலைவர்கள் மற்றும் மேலிட பொருப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  அதற்கு முன்பு எந்த முடிவும் எடுக்கப்படாது.

எனவே தமிழக காங்கிரஸின் முடிவு குறித்து வரும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவையல்ல. வெறும் வதந்திகளே” என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

You may have missed