பிரதமருடன் நாளை ஓ பி எஸ் சந்திப்பு : அணிகள் இணையுமா?

டில்லி

டில்லியில் நாளை ஓ பன்னீர்செல்வம் சந்திக்கப்போவதாகவும் அப்போது அணிகள் இணைப்பு பற்றி பேச்சு நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு டில்லி சென்றுள்ள தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க முயன்றார்.    அனுமதி கிடைக்க தாமதம் ஆனதால் அவர் ஷீரடி சென்று சாயிபாபா தரிசனம் செய்தார்.  தற்போது நாளை அவரை சந்திக்க மோடி நேரம் அளித்துள்ளதாகவும்,  நாளை இந்த சந்திப்பு நிகழும் எனவும் தெரிய வந்துள்ளது.

தற்போது அ தி மு க மூன்று அணிகளாக பிரிந்துள்ளதை பற்றியும், இந்த இணைப்பு பற்றியும் பேச்சு வார்த்தை நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.