சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சியில் பணம் கட்டி விருப்ப மனு வாங்கியவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்டியை பணத்தை திரும்பத்தரக் கோரி கோரிக்கை வைத்துள்ளார் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.. ஒருவர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணம் வசூலிக்கத்தான் கட்சி சாராதவர்களும் விருப்பமனு அளிக்கலாம் எங்னறு  மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, திடீரென இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து களமிறங்கி உள்ளது.

முன்னதாக கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் என்று மநீம தலைவர் கமல் அறிவிக்க அதுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், யார் வேண்டுமானால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்தார். விருப்ப மனு பெற ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேராத திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ புகழேந்தி என்பவரும் ரூ.10ஆயிரம் கட்டி விருப்பமனு தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு விசாரித்த நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடுப்பான புகழேந்தி தனது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கமல்ஹாசன் கட்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான்  தமிழக காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப்பெற்று ஓய்வூதியத்தில் காலத்தை தள்ளி வருகிறேன்… பொதுமக்களுக்கு சேவை செய்யலாம் என்ற ஆவலில்  ஏற்கனவே கடந்த  2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்போது  திருத்துறைப்பூண்டி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட எண்ணி ரூ.10ஆயிரம் கட்டி  விருப்பமனு அளித்தேன்.

ஆனால், வேட்பாளர் நேர்காணலின்போது, என்னை கட்சித்தலைவர்கள் கண்ணியக்குறைவாக நடத்தினர். என்னுடைய விருப்பமனு மீதான நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்காத நிலை யில், வேறுஒருவரை வேட்பாளராக அறிவித்து உள்ளனர்.

உங்கள் கட்சியை சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்துவீர்கள் என தெரிந்திருந்தால் நான் 10 ஆயிரம் ரூபாய் கட்டி விருப்பமனு அளித்திருக்க மாட்டேன் என்று கூறி உள்ளார்.

மேலும்,  விருப்பமனுக்கான  பணம் திரும்ப அளிக்கப்படாது என அறிவித்து பணத்தை வாங்கி உள்ளீர்கள்.  இதன்மூலம் உங்களுக்கு ரூ. 1 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்பது அறிவேன்.

நான் ஓய்வுப்பெற்று ஓய்வூதியம்மூலம் குடும்பம் நடத்திவரும் சாமானியன்.‘ எனக்கு ரூ.10 ஆயிரம் பெரிய தொகை. எனது   ஏழ்மை நிலை கருதி அதில் உங்கள் செலவுக்கு ஒரு ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு மீதி ரூ.9 ஆயிரத்தை தாருங்கள் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணம் வசூலிக்கத்தான் கமல்ஹாசன் கட்சி சாராதவர்களும் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்தாரா என கேள்வி எழுப்பப்படுகிறது. கட்சி உறுப்பினர் தவிர கட்சி சாராதவர்கள் எத்தனை பேரிடம் மக்கள் நீதி மய்யம் விருப்ப மனு என்ற பெயரில் பணம் பிடுங்கியது என்பது குறித்து  அரசியலில் வியாக்கியானம் பேசி வரும், நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக  அறிவிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் ஓங்கி ஒலிக்கிறது.