ரியான் ஏர் விமானத்தில் பயணிகளுக்குள் தகராறு – வீடியோ 

ண்டன்

ரியான் ஏர் நிறுவனத்தின் பறக்கும் விமானத்தில் பயணிகளுக்கு இடையில் தகராறு நடந்துள்ளது.

ரியான் ஏர் விமான நிறுவனத்தின் விமானம் கடந்த 7 ஆம் தேதி அன்று லண்டனில் இருந்து மலாக்கா வரை சென்றுக் கொண்டிருந்தது.  இந்த விமானத்தின் பயண நேரம் சுமார் 3 மணி நேரம் ஆகும்.  இந்த விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மலாக்காவில் இருந்து வேறு விமானம் மூலம் செல்லும் பயணிகளும் இருந்தனர்.

அன்று லண்டன் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு ஏற்பட்டிருந்தது.  இதனால் இந்த விமானம் லண்டனில் இருந்து நான்கு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.  இந்த தாமதத்தினால் பயணிகளில் பலர் அதிருப்தி  அடைந்துள்ளனர்.   பறக்கும் விமானத்தில் மூவர் மது போதையில் இருந்ததால் விமானப் பணியாளர்களிடம் கடுமையாகச் சண்டையிட்டுள்ளனர்.

இது மற்ற பயணிகளுக்கு மிகவும் தொல்லை அளித்துள்ளது.  இதனால் அவர்கள் அந்த மூவரையும் நோக்கி கூச்சல் இட்டுள்ளனர்.  அதற்குப் பதிலுக்கு அவர்கள் கத்த தகராறு முற்றியுள்ளது.  இந்த தகராறு பயணம் முழுவதும் தொடர்ந்ததால்  விமானம் மேலும் தாமதமாகி உள்ளது.

இந்த தகராற்றை அகமது என்னும் பயணி வீடியோ படம் எடுத்து வெளியிட்டு தற்போது அது வைரலாகி வருகிறது.   இந்த பதிவில் அகமது, ”இந்த மூவரும் விமானப் பணிப்பெண்ணுடன் சண்டை இட்டதை ஒரு சிலர்  கண்டித்ததால் அந்த தகராறு பயணம் முழுவதும் நடந்தது.  என் வாழ்நாளில் இது மிக நீண்ட பயணமாகி விட்டது” எனப் பதிந்துள்ளார்.