இன்னும் 4 நாட்களுக்கு கேரளாவில் கனமழை : ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம்

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கேரள மாநிலம் முழுவதும் கனத்த மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

அந்த எச்சரிக்கையின்படி இன்று கோழிக்கோடு வயநாடு,கண்ணூர் காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் நாளை அதாவது 4 ஆம் தேதி அன்று கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், 5 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் கொல்லம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் 6 ஆம்தேதி அன்று கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இங்கு இன்னும் 24 மணி நேரத்தில் 115.6 மிமீ முதல் 204.4 மிமீ வரை மழை பெய்யலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி